பிகாரில்  ஏஐஎம்ஐஎம் மாவட்ட தலைவர் சுட்டுக்கொலை 

பிகாரில் மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் மாவட்ட தலைவர் மர்ம நபர்களாகல் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிகாரில் மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் மாவட்ட தலைவர் மர்ம நபர்களாகல் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பிகார் மாநிலம், மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆரிப் ஜமால். இவர் சனிக்கிழமை இரவு தனது கடையில் இருந்துள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 3 மர்ம நபர்கள், ஜமால் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் அவரது வயிற்றுப் பகுதியில் குண்டு ஒன்று பாய்ந்தது. காயமடைந்த அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 
ஆனால் அவரை பரிசோசித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சியின்செய்தித் தொடர்பாளர் ஆதில் ஹசன், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார். மேலும் மற்ற கட்சி நிர்வாகிகளும் சம்பவ இடத்திற்கு வந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆதில் ஹசன் பதிவை ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி மறுபதிவு செய்துள்ளார். மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் மாவட்ட தலைவர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பிகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com