
பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் செவ்வாய்க்கிழமை இன்று (டிச. 26) 2 கோடி சப்ஸ்கிரைபர்ஸை எட்டியுள்ளது. உலக அளவில் அதிக சப்ஸ்கிரைபர்ஸ் கொண்ட தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அரசியல் தலைவர்கள் குறித்தும், திட்டங்கள் குறித்தும், நாட்டு நடப்புகள் குறித்தும் ஆங்காங்கே அவர் பேசும் விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது அவர் பங்குபெற்று பேசும் பிரசாரங்களும் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்நிலையில், நரேந்திர மோடி யூடியூப் சேனல் 2 கோடி சப்ஸ்கிரைபர்ஸை எட்டியுள்ளது. இதுவரை 23 ஆயிரத்துக்கும் அதிகமான விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம், உலக அளவில் அதிக சப்ஸ்கிரைபர்ஸ் கொண்ட தலைவராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார்.
அவருக்கு அடுத்தபடியாக பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனராவ் 64 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உடன் 2ஆம் இடத்தில் உள்ளார். இது மூன்றில் ஒரு பங்கு சப்ஸ்கிரைபர்ஸ். உக்ரைன் அதிபர் வெலோதிமீர் ஸெலென்ஸ்கி 11 லட்சம் சப்ஸ்கிரைபஸுடன் 3வது இடத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.