எம்.பில். படிப்புகளில் சேர வேண்டாம்: மாணவர்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்!

எம்.பில். படிப்புகளில் சேரவேண்டாம் என்று மாணவர்களை பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எம்.பில். படிப்புகளில் சேரவேண்டாம் என்று மாணவர்களை பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

எம்.பில். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தி வரக்கூடிய பல்கலைக்கழகங்களைக் குறிப்பிட்டு, ‘எம்.பில். படிப்பானது அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல’ என்று பல்கலைக்கழக மானியக் குழு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலர் மணீஷ் ஜோஷி புதன்கிழமை கூறியதாவது, “சில பல்கலைக்கழகங்கள் எம்.பில். படிப்புக்கான விண்ணப்பங்களை வழங்கி, மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் கவனத்துக்கு வந்துள்ளது. எம்.பில். படிப்பானது அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல. 

2022 பல்கலைக்கழக மானியக் குழு விதிகள் எண்.14, உயர்கல்வி நிறுவனங்கள் எந்தவித எம்.பில். படிப்புகளையும் வழங்கக்கூடாது என்று தெளிவாக கூறியுள்ளது. எனவே எம்.பில். படிப்புகளுக்கு எந்தப் பல்கலைக்கழகமும் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான எம்.பில். படிப்பு சேர்க்கைகளை உடனடியாக நிறுத்துமாறு பல்கலைக்கழகங்களை யுஜிசி கூறியுள்ளது. 

மாணவர்கள் எந்த வித எம்.பில். படிப்புகளிலும் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com