மேற்கு வங்கத்தில் உள்ள பாபா லோகனாத் கோயிலுக்கு சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, மதத்தை அரசியலாக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
'எல்லா மதங்களையும் மதியுங்கள். எந்த மதமும் வன்முறையை போதிப்பதில்லை. அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவதையும், சகோதரத்துவத்தை மட்டுமே எல்லா மதங்களும் கற்பிக்கின்றன'என மம்தா பானர்ஜி கூறினார்.
மேலும், 'தேர்தல் நேரத்தில் மட்டும் மதங்களை மதிப்பது தவறு. மதத்தை அரசியல்படுத்துவது மிகவும் தவறு' எனவும் கூறினார். மேற்கு வங்கத்தை மதங்கள் சார்ந்த சுற்றுலாத் தளமாக மாற்றுவது தொடர்பான தனது பார்வையையும் பகிர்ந்துகொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.