வெள்ளிக்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுப்பு.. மழைக்கு அல்ல!

தலைநகர் தில்லியில், வெள்ளிக்கிழமை கடுமையான பனிமூட்டம் நிலவும் என்பதால், வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
வெள்ளிக்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுப்பு.. மழைக்கு அல்ல!


புது தில்லி: தலைநகர் தில்லியில், வெள்ளிக்கிழமை கடுமையான பனிமூட்டம் நிலவும் என்பதால், வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

வெள்ளிக்கிழமை காலை 4 மணி முதல் 10 வரை வரை, தில்லி -என்சிஆர் பகுதிகளில் வாகனப் போக்குவரத்தைத் தவிர்க்கமாறு சிவப்பு எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடுமையான பனி மூட்டம் காரணமாக, எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், விபத்துகள் நிகழும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

தலைநகரில் கடந்த சில நாள்களாக அதிகாலை வேளையில் மிகுந்த அடா் மூடுபனி நிலவி வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகள், ஹரியாணா, சண்டீகா், தில்லி, தெற்கு ராஜஸ்தான் மற்றும் வடக்கு மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் அடா் மற்றும் மிகவும் அடா் மூடுபனி இருந்தது. இதன் காரணமாக காண்புதிறன் 25 மீட்டராகக் குறைந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக பாட்டியாலா, அம்பாலா, சண்டீகா், ஹரியாணா, தில்லி, பாலம், பரேய்லி, லக்னெள், வாரணாசி மற்றும் குவாலியா் உள்ளிட்ட இடங்களில் காண்புதிறன் 30 மீட்டருக்கும் குறைவாக இருந்தது. இதைத் தொடா்ந்து, தில்லி ரயில் நிலையங்களுக்கு வர வேண்டிய 22-க்கும் மேற்பட்ட ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 31) வரையிலும் ஹரியாணா, சண்டீகா், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் காலை வேளைகளில் மிகுந்தஅடா் மூடுபனி இருக்கும். எனவே, வாகன ஓட்டுநா்கள் மிகவும் ஜாக்கிரதையுடன் வாகனங்களை இயக்கும்படியும், விமானங்கள், ரயில்கள், பேருந்து பயணங்களுக்கு முன்பாக வானிலை அறிவிப்புகளை தெரிந்து கொண்டு எந்த விதமான போக்குவரத்து முறையையும் பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 29) மிகவும் அடா்த்தியான மூடுபனி நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com