நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல்: காலணி தைப்பவரை தேடும் காவல்துறை

நாடாளுமன்றத்தில் அத்துமீறு நுழைந்து வண்ண புகைக் குப்பிகளை வீசிய சம்பவத்தில், செருப்புத் தைக்கும் தொழிலாளியை தில்லி காவல்துறை தேடி வருகிறது.
நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல்: காலணி தைப்பவரை தேடும் காவல்துறை

புது தில்லி: நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அரண்களை தாண்டி அத்துமீறு நுழைந்து வண்ண புகைக் குப்பிகளை வீசிய சம்பவத்தில், செருப்புத் தைக்கும் தொழிலாளியை தில்லி காவல்துறை தேடி வருகிறது.

நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் நுழைந்து, பார்வையாளர் மாடத்திலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் பகுதிக்குள் குதித்த குற்றவாளியின் காலணியை வடிவமைத்துக் கொடுத்த சைக்கிளில் சென்று செருப்புத் தைத்துக் கொடுக்கும் தொழிலாளியை தேடுவதற்கு, தில்லி காவல்துறையினர், உத்தரப்பிரதேச காவல்துறையின் உதவியை நாடியுள்ளது.

அதாவது, மக்களவைக்குள் நுழைந்த சாகர் ஷர்மா மற்றும் மனோரஞ்சனுக்கு காலணிக்குள் வண்ண புகைக் குப்பியை மறைத்து வைக்க ஏதுவாக, ஷூவை திருத்தியமைத்துக் கொடுத்த செருப்புத் தைக்கும் தொழிலாளி பற்றி தகவல்களை திரட்டி வருகிறார்கள்.

அவரை இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக மாற்றவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சாகர், தனது காலணியை முதலில் தானே மாற்றியமைக்க முயன்றதாகவும், ஆனால் அது முடியாமல் போனதும், சைக்கிளில் வந்து செருப்புத்தைத்துக் கொடுக்கும் தொழிலாளியின் உதவியை நாடியதாகவும் வாக்குமூலம் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த தேடும் பணி நடைபெற்று வருகிறது.

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பயங்கரவாதத் தாக்குதலின் ஆண்டு நிறைவு நாளான டிச.13-ஆம் தேதி சாகா் சா்மா மற்றும் மனோரஞ்சன் டி ஆகிய இருவரும் பூஜ்ஜிய நேரத்தில் மக்களவையில் உள்ள பொது கேலரியில் இருந்து அரங்கத்தில் குதித்து, புகைக் குப்பிகளில் இருந்து மஞ்சள் வாயுவை வெளியேற்றி கோஷங்களை எழுப்பினா். இதன் பிறகு, இவா்கள் இருவரும் எம்.பி.க்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனா்.

அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட அமோல் ஷிண்டே மற்றும் நீலம் தேவி ஆகிய இருவா், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ‘தனாஷாஹி நஹி சலேகி‘ என்று கோஷம் எழுப்பி, புகைக் குப்பிகளில் இருந்து வண்ண வாயுவைத் தெளித்தனா். இதையடுத்து, இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com