வி.கே.பாண்டியனுக்கு எதிர்ப்பு: கருப்பு கொடி காட்டிய காங்கிரஸ்

புரி ஜெகந்நாதர் கோயில் புனரமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகளைப் பார்வையிட வருகை தந்த வி.கே.பாண்டியனுக்குக் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வி.கே.பாண்டியனுக்கு எதிர்ப்பு: கருப்பு கொடி காட்டிய காங்கிரஸ்

புவனேஷ்வர்: புரி ஜெகந்நாதர் கோயிலில் ஒடிசா அரசின் பாரம்பரிய வழித்தடத் திட்டத்திற்கான தொடக்கவிழா ஜன.17-ல் நடைபெறவுள்ளது. 

முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளர் வி.கே.பாண்டியன் சனிக்கிழமை அந்தக் கோயிலில் நடைபெறும் வேலைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். 

5டி- மாற்றத்திற்கான முன்னெடுப்பு மற்றும் நபின் (புதிய) ஒடிசா திட்டங்களின் தலைவரான வி.கே.பாண்டியன், புராதன கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வருகை புரிந்தபோது காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடிக் காட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பழமையான கோயிலில் தரை மட்டுப்படுத்தும் பணிகள், புனரமைப்பு பணிகள் மற்றும் விழாவுக்கான ஏற்பாடுகள், பார்க்கிங் இடங்களுக்கான அமைப்பு, கழிவு மேலாண்மை, ஓவிய புனரமைப்பு உள்ளிட்டவற்றை பார்வையிட்ட வி.கே.பாண்டியன் விரைவில் முடிக்க வலியுறுத்தியதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com