கோவை-பெங்களூரு உள்பட 6 வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

அயோத்தியில் நடைபெற்ற விழாவில் கோவை-பெங்களூரு உள்பட 6 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
கோவை-பெங்களூரு உள்பட 6 வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

அயோத்தியில் நடைபெற்ற விழாவில் கோவை-பெங்களூரு உள்பட 6 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

அயோத்திக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அயோத்தி விமான நிலையத்திலிருந்து, ரயில் நிலையம் வரை சாலை மார்க்கமாக வாகன பேரணியாக வந்த பிரதமர் மோடிக்கு மலர்களை தூவி வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. 

பின்ன்ர், அயோத்தியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தையும், பல்வேறு வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம் அவர் திறந்துவைத்தார். 

கோவை - பெங்களூரு உள்பட 6 வந்தே பாரத் ரயில் சேவையையும், தா்பங்கா-அயோத்தி-ஆனந்த் விஹாா் உள்பட இரு அம்ருத் பாரத் விரைவு ரயிலையும் அவர் தொடங்கி வைத்தார். 

அயோத்தி ராமா் கோயிலுக்கான அணுகலை எளிதாக்குவதற்காக 4 சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. ராம பாதை, பக்தி பாதை, தா்ம பாதை, ஸ்ரீராம ஜென்மபூமி பாதை ஆகிய அந்த 4 சாலைகளையும் பிரதமா் மோடி திறந்துவைத்தார். 

அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமான ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு மூலவா் சிலை பிரதிஷ்டை விழா ஜனவரி 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com