மீனவர் நலனுக்காக ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர்

மீனவர் நலனுக்காக ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மீனவர் நலனுக்காக ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர்
Published on
Updated on
1 min read

மீனவர் நலனுக்காக ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தி 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில், 7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள கூட்டறவு சங்கங்கள் குறித்த தரவு தளவு உருவாக்கப்படும். ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், பசுமை வளர்ச்சி இளைஞர்களுன் ஆற்றல் நிதித்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருள்களை சேமிக்க பரவலாக்கப்பட்ட சேமிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com