பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அரிவாள் வடிவ செல் ரத்த சோகை அவ்வளவு கொடிய நோயா?

2047 க்குள் அரிவாள் வடிவ செல் இரத்த சோகையை அகற்றுவதற்கான பணி தொடங்கப்படும்.
அரிவாள் வடிவ செல் ரத்த சோகை
அரிவாள் வடிவ செல் ரத்த சோகை
Published on
Updated on
1 min read


2047 க்குள் அரிவாள் வடிவ செல் இரத்த சோகையை அகற்றுவதற்கான பணி தொடங்கப்படும். பாதிக்கப்பட்ட பழங்குடியின பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

அதாவது, அரிவாள் வடிவ செல் ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கான திட்டம் விரைவில் தொடங்கப்படும். மேலும், பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் 40 வயது வரை உள்ள 7 கோடி பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி, இந்த நோய் தாக்கம் இருக்கிறதா என்று கண்டறியப்பட்டு, மக்களை ஒருங்கிணைத்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டமைப்போடு மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல முக்கிய திட்டங்களில், இந்த அரிவாள் வடிவ செல் ரத்த சோகை இடம்பெற்றிருக்கக் காரணம் என்ன? அந்த நோயின் தாக்கம் என்ன? 

அரிவாள் செல் நோய் (எஸ்சிடி) என்பது மரபணு இரத்த சிவப்பணு கோளாறுகளின் காரணமாக உருவாகிறது. இரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் உள்ளது, இது ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் புரதமாகும். ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் வட்டமாக இருக்கும். மேலும் அவை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல சிறிய இரத்த நாளங்கள் வழியாக நகர்ந்து செல்லும்.

எஸ்சிடி எனப்படும் அரிவாள் செல் நோய் பாதித்த ஒருவருக்கு, ஹீமோகுளோபின் அசாதாரணமாக இருக்கும். இந்த இரத்த சிவப்பணுக்கள் கடினமாகவும் ஒட்டும் தன்மையுடனும் மற்றும் ஆங்கில எழுத்தான சி- வடிவில் அரிவாள் கருவி போல் தோற்றமளிக்கும். 

இந்த அரிவாள் செல்கள் வெகு விரைவாக இறந்துவிடும், இதனால், சிவப்பு இரத்த அணுக்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தும். மேலும், அவை சிறிய இரத்த நாளங்கள் வழியாக செல்லும்போது, ​நாளங்களுக்குள் ​அவை சிக்கி இரத்த ஓட்டத்தையே அடைத்துவிடும் அபாயமும் உள்ளது. 

இதனால், உடல் வலி மற்றும் தொற்றுநோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிற தீவிர நோய்களை ஏற்படுத்தும் அபாயமும் அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டுமல்லாமல், சுகாதாரத் துறை தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

அவற்றில், நாட்டின் முக்கிய இடங்களில் 157 புதிய செவிலியர் கல்லூரிகள் நிறுவப்படும்.
ஐசிஎம்ஆர் ஆராய்ச்சித் தகவல்கள் அனைத்தும் பொதுமக்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் ஆய்வுகளுக்குப் பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
உடல் நலத்துக்கு முக்கியமான சிறுதானிய உற்பத்தி, விற்பனை, பயன்பாடு ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மருந்து துறையில் ஆய்வுகளை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com