மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை சந்தித்தார்.
2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
இதற்கு முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, மத்திய இணை நிதியமைச்சர்கள் பகவத் கிஷன்ராவ் கராட், ஸ்ரீ பங்கஜ் செளத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர், நிதியமைச்சக முக்கிய அதிகாரிகளும் உடனிருந்தனர்.
தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கும் நிர்மலா சீதாராமன், மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.