தனிநபர் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது: நிர்மலா சீதாராமன்

தனிநபர் வருமானம் இரட்டிப்பாகி உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தனிநபர் வருமானம் இரட்டிப்பாகி உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

பொது பட்ஜெட் உரையில்  நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது:

உலக பொருளாதார தரவரிசையில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை மக்களுக்கு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் காப்பீடு திட்டங்களால் 44 கோடி பேர் பயனடைந்துள்ளனர்

பொருளாதார ரீதியாக 10 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா விளங்குகிறது.

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாக கொண்டு பட்ஜெ தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்து வருகிறார். அவா் தாக்கல் செய்யும் 5-ஆவது நிதிநிலை அறிக்கையாகவும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசின் கடைசி முழுநேர நிதிநிலை அறிக்கை இது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com