ரூ.7,000 கோடியில் 3-ஆம் கட்ட இ-நீதிமன்ற திட்டம்

நீதித் துறையின் செயல்திறன் மிக்க செயல்பாட்டுக்காக, 3-ஆம் கட்ட இ-நீதிமன்றங்கள் திட்டம் ரூ.7,000 கோடியில் தொடங்கப்படும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

எண்ம (டிஜிட்டல்) உள்கட்டமைப்பைக் கொண்ட நீதித்துறையைக் கட்டமைப்பதை இ-நீதிமன்றங்கள் திட்டம் இலக்காக கொண்டுள்ளது. எளிதில் அணுகக்கூடிய, செயல்திறன்மிக்க, அனைத்து மக்களுக்கும் சமமான நீதி வழங்குவதை இத்திட்டம் உறுதிசெய்யும்.

இந்தத் திட்டத்தின் 3-ஆவது கட்டத்தில், மனுதாரா் அல்லது வழக்குரைஞா், எப்பகுதியிலிருந்தும் எந்த நேரத்திலும் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யமுடியும் என மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com