
இயந்திரம் மூலம் மட்டுமே கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில்,
கழிவுநீர் கால்வாய்கள், தொட்டிகள் சுத்தகரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகளுக்கு இனி மனிதர்களுக்கு மாற்றாக 100 சதவிகிதம் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றார்.
கடந்த 5 ஆண்டுகளில் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்ட 350-க்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.