எதற்கெல்லாம் வரி குறைகிறது? டிவி, கைப்பேசி விலை குறையும்

2023 - 24ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
எதற்கெல்லாம் வரி குறைகிறது? டிவி, கைப்பேசி விலை குறையும்
எதற்கெல்லாம் வரி குறைகிறது? டிவி, கைப்பேசி விலை குறையும்

புது தில்லி: 2023 - 24ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் ஆற்றிய உரையில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு, வரி விலக்கு, வரி உயர்வு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

அதில், எந்தெந்த பொருள்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எந்தெந்த பொருள்களின் விலை குறையும் என்ற விவரங்களை அறியலாம்.

ஜவுளி மற்றும் வேளாண் பொருட்களைத் தவிர இதர பொருட்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 21 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாகக் குறைப்பு.

முதலீட்டுப் பொருட்களுக்கு இறக்குமதி வரி விலக்கு  அளிக்கப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமளிக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் மறைமுக வரிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

கேமரா லென்ஸ், தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும்.

இதையும் படிக்க.. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான சிறுசேமிப்புத் திட்டம் - முழு விவரம்

லித்தியம் பேட்டரி தயாரிப்பு உபகரணங்களுக்கான இறக்குமதி வரிவிலக்கு தொடரும்.

ரசாயன பொருள்களுக்கான வரி குறையும்.

இறால் உணவு பொருள்களுக்கான இறக்குமதி வரியில் சலுகை வழங்கப்படும். 

செல்லிடப்பேசி உதிரிபாகங்களுக்கு சலுகை
செல்லிடப்பேசி உதிரிபாக இறக்குமதிக்கு வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

டிவி விலை குறைய வாய்ப்பு
டிவி பேனல்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால் டிவி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com