
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://inckarnataka.in என்ற பக்கத்தை மர்ம நபர்கள் ஹாக் செய்துள்ளனர். தலைவர்கள் இதை ஹேக்கர் தாக்குதல் என்று தெரிவித்துள்ளனர். மர்ம நபர்கள் இணையதளத்தை மட்டும் ஹேக் செய்யவில்லை, டொமைன் சர்வர் ஐடியையும் "முடக்கியுள்ளனர்" என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், https://kpcc.in/indexk.html# என்ற பொய்யான இணையதளத்தை உருவாக்கி, காங்கிரஸ் கட்சி குறித்தும், கட்சியின் தலைவர்கள் குறித்தும் அவதூறான கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ள பக்கத்தை மீட்கும் முயற்சிகளில் காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
24 மணி நேரத்திற்குள் கர்நாடகாவில் காங்கிரஸ் மீது நடத்தப்படும் மூன்றாவது டிஜிட்டல் தாக்குதல் இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.