

பிரதமர் மோடி பிப்ரவரி 6ஆம் தேதி கர்நாடகத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
பின்னர் காலை சுமார் 11:30 மணியளவில், பெங்களூருவில் இந்திய எரிசக்தி வாரம் 2023 நிகழ்வை அவர் தொடங்கி வைக்கிறார். அதன்பின், பிற்பகல் 3:30 மணியளவில், துமகுருவில் உள்ள எச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறும் இந்திய எரிசக்தி வாரம் 2023 நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.