லிபியா கடற்கரையில் 7 நாள்களில் 131 புலம்பெயர்ந்தோர் மீட்பு!

லிபியா கடற்கரையில் கடந்த ஒரு வாரத்தில் 131 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. 
லிபியா கடற்கரையில் 7 நாள்களில் 131 புலம்பெயர்ந்தோர் மீட்பு!

லிபியா கடற்கரையில் கடந்த ஒரு வாரத்தில் 131 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. 

2023 ஜனவரி 29 முதல் பிப்ரவரி 4 வரையில், சுமார் 131 புலம்பெயர்ந்தோர் லிபியாவுக்குத் திரும்பியுள்ளனர். மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தவர்களில் 23 பெண்களும், 10 குழந்தைகளும் அடங்குவர். 

இந்தாண்டு, இதுவரை மொத்தம் 1,565 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டு லிபியாவுக்குத் திரும்பியுள்ளனர் என்று ஐஓஎம் தெரிவித்துள்ளது. 

2022-ஆம் அண்டில் மொத்தம் 24,684 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டு லிபியாவுக்குத் திரும்பினர்.மேலும் 529 புலம்பெயர்ந்தோர் இறந்தனர். 848 பேர் லிபிய கடற்கரையில் மாயமாகியுள்ளனர். 

கடந்த 2011இல் மறைந்த சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர், நாட்டில் நிலவிய பாதுகாப்பின்மை மற்றும் குழப்பம் காரணமாக, பல புலம்பெயர்ந்தோர், பெரும்பாலும் ஆப்பிரிக்கர்கள், மத்திய தரைக் கடலைக் கடந்து லிபியாவில் இருந்து ஐரோப்பியக் கரைக்குச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com