238 நகரங்களில் 5ஜி சேவை தொடக்கம்!

நாட்டில் ஜனவரி முதல் 238 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

நாட்டில் ஜனவரி முதல் 238 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தகவல் தொடர்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவைகளை வழங்குவதற்கான சாலை வரைபடத்தை அரசு உருவாக்கியுள்ளது. 

தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்கள் 5ஜி சேவைகளை அக்டோபர் 1, 2022 முதல் வழங்கத் தொடங்கியுள்ளனர். 

ஜனவரி 31, 2023 நிலவரப்படி உரிமம் பெற்ற அனைத்து சேவைப் பகுதிகளிலும், மொத்தம் 238 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. 

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான அறிவிப்பாணையின்படி, ஸ்பெக்ட்ரம் ஏலம் மற்றும் உரிமத்துக்கான கட்டுப்பாடுகளில் செயல்படும் திறனானது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளாக இருக்க வேண்டும்.

இந்த கால அளவைக் காட்டிலும் செல்லிடப்பேசி நெட்வோர்க் மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்றால், தொழில்நுட்ப - வணிக ரீதியிலான தகவல்கள் தொலைத்தொடர்பு சேவை வழங்குவோரால் பரிசீலிக்கப்படுவதன் அடிப்படையில் இருக்கும்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சௌகான் இந்தத் தகவலைத் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com