வீடு, வாகனக் கடன் வட்டி உயர்கிறது! ரெப்போ வட்டி விகிதம் 0.25% அதிகரிப்பு!!
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.


வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
இதன் மூலமாக வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம்(ரெப்போ வட்டி விகிதம்) 6.25 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதையடுத்து அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க | ஈரோடு கிழக்கில் பிப். 24ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்!
மேலும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும், பணவீக்கம் சராசரியாக 5.6% ஆக இருக்கும் என்றும் உலக பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் இந்திய பொருளாதாரமும் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வையடுத்து வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கி, நாட்டின் பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ஆகும்.
கடந்த 2022 மே முதல் 6 முறை ரெப்போ வட்டி விகிதம் மொத்தமாக 2.5% வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இனி வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் வாய்ஸ் மெசேஜ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...