உத்தரப் பிரதேசத்தின், மெயின்புரியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் அசுத்தமான தண்ணீரைக் குடித்த 21 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மெயின்புரியில் உள்ள பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி கூறுகையில்,
பிப்ரவரி 9 முதல் அரசு பொறியியல் கல்லூரியில் குறைந்தது 21 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது 7 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார். கல்லூரியில் உள்ள வாட்டர் கூலரில் இருந்து தண்ணீர் குடித்ததால் மாணவர்களின் நிலை மோசமடைந்தது.
உணவு மற்றும் பாதுகாப்புத் துறை குழுவினர் கல்லூரிக்கு வந்து அசுத்தமான நீரின் மாதிரியை ஆய்வுக்காக சீல் வைத்தனர்.
அசுத்தமான தண்ணீரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குடித்த தண்ணீரில் விஷம் கலந்திருப்பதாக அச்சம் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.