இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கியதில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா?

2022 ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியா வழங்கி முதலிடத்தைப் பிடித்துள்ளது. 
இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கியதில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா?


2022 ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியா வழங்கி முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியாவில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 2022 ஆம் ஆண்டில், இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தையும், குவைத் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. 

2022 இல் சவுதி அரேபியா இந்தியர்களுக்கு 1,78,630 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் முறையே 32,845 மற்றும் 44,316 ஆக இருந்த எண்ணிக்கையில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ள குவைத்,  2021 ஆம் ஆண்டை விட ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. பஹ்ரைன் 10,232 வேலை வாய்ப்புகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

2018 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 57,613 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது, 2019 ஆம் ஆண்டில் 45,712 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதை தொடர்ந்து குறைத்து வருகிறது. 

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின்புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் புலம்பெயர்ந்த மக்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் வளைகுடா கூட்டுறவு கவுன்சில் நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். இந்த பிராந்தியத்தில் உள்ள இந்திய மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் திறன்மிக்க மற்றும் திறன் குறைந்த தொழிலாளர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய தொழில் வல்லுநர்களில் 20 முதல் 23 சதவீதம் பேர் மருத்துவர்கள், பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், வங்கியாளர்கள் போன்ற பல உயர்மட்ட 'ஒயிட் காலர்' பணிகளில் உள்ளனர்.

இது குறித்து பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஆஷிஃப் கூறுகையில், "அடுத்த சில ஆண்டுகளில் இது பன்மடங்கு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்றும், "எங்கள் பெரும்பாலான பணியாளர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்" என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com