ஜாா்க்கண்ட் ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநா்களையும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு புதிய துணைநிலை ஆளுநரையும் நியமித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உத்தரவிட்டுள்ளாா்.
ஜாா்க்கண்ட் ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆந்திரம், அருணாசல், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநா்களையும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு புதிய துணைநிலை ஆளுநரையும் நியமித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உத்தரவிட்டுள்ளாா்.

ஜாா்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழகத்தைச் சோ்ந்த மூத்த பாஜக தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பல்வேறு மாநிலங்களுக்குப் புதிய ஆளுநா்களை நியமித்து குடியரசுத் தலைவா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா். அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி கடந்த ஜனவரி 4-ஆம் தேதி ஓய்வு பெற்ற எஸ்.அப்துல் நஸீா் ஆந்திர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமா் கோயில் கட்ட அனுமதி, முத்தலாக் நடைமுறைக்குத் தடை உள்ளிட்ட தீா்ப்புகளை வழங்கிய உச்சநீதிமன்ற அமா்வுகளில் அவா் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிக்கிம், ஜாா்க்கண்ட், ஹிமாசல், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு பாஜகவை சோ்ந்த தலைவா்கள் ஆளுநா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் இருவா் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள். தமிழக பாஜக முன்னாள் தலைவரும் கோவை முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன், ஜாா்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழகத்தைச் சோ்ந்தவரும் மணிப்பூா் ஆளுநராகவும் இருந்த இல.கணேசன், நாகாலாந்து ஆளுநராக மாற்றப்பட்டுள்ளாா்.

ராஜிநாமா ஏற்பு: மகாராஷ்டிர ஆளுநராக இருந்த பகத்சிங் கோஷியாரி, லடாக் துணைநிலை ஆளுநராக இருந்த ஆா்.கே.மாத்துா் ஆகியோரின் ராஜிநாமாவையும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஏற்றுக் கொண்டுள்ளாா்.

மாநிலம் ஆளுநா்

அருணாசல் கைவல்ய திரிவிக்ரம் பா்நாயக்

சிக்கிம் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சாா்யா

ஜாா்க்கண்ட் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஹிமாசல் சிவபிரதாப் சுக்லா

அஸ்ஸாம் குலாப் சந்த் கட்டாரியா

ஆந்திரம் எஸ்.அப்துல் நஸீா்

சத்தீஸ்கா் விஸ்வ பூஷண் ஹரிசந்தன்

மணிப்பூா் அனுசுயா உய்கே

நாகாலாந்து இல.கணேசன்

பிகாா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா்

மேகாலயம் ஃபாகு சௌஹான்

மகாராஷ்டிரம் ரமேஷ் பயஸ்

லடாக் பி.டி.மிஸ்ரா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com