பாஜக ஆளும் மாநிலங்களால்தான் மத்திய அரசை எளிதில் நாட முடியும்: திரிபுரா முதல்வர்

மாநிலங்களிலும் பாஜக ஆட்சி செய்தால்தான் மத்திய அரசை எளிதில் நாட முடியும் என்று திரிபுரா முதல்வர் மாணிக் சஹா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களால்தான் மத்திய அரசை எளிதில் நாட முடியும்: திரிபுரா முதல்வர்

மாநிலங்களிலும் பாஜக ஆட்சி செய்தால்தான் மத்திய அரசை எளிதில் நாட முடியும் என்று திரிபுரா முதல்வர் மாணிக் சஹா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக, மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மோதுகின்றன.

இந்த தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவுபெறுகிறது.

இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு திரிபுரா முதல்வர் மாணிக் சஹா அளித்த பேட்டியில்,

கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற 36 இடங்களைவிட இம்முறை பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும். அரசியலுக்கான அர்த்தத்தை பிரதமர் நரேந்திர மோடி மாற்றிவிட்டார்.

பாஜக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே, விமான சேவை, நெடுஞ்சாலைப் பணிகள், இணைய சேவைகள் பெருமளவு மேம்படுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பாரம்பரிய அரசியலை செய்து வருகின்றனர். அவர்கள் வாக்குக்காக வேலை செய்கிறார்கள். ஆனால், நாங்கள் மக்களுக்காக வேலை செய்கிறோம். மக்களின் நம்பிக்கைக்கு முன்னால் அவர்களின் கணக்குகளுக்கு இடமில்லை.

கம்யூனிஸ்ட்டுகள் பல ஆண்டுகளாக ஆட்சி செய்தனர். ஆனால், மத்திய அரசு எதுவும் தரவில்லை. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சாலைகள், ரயில்கள், விமான சேவைகள் உள்ளிட்டவை அளித்துள்ளார். இது வெறும் தொடக்கம்தான்.

மாநிலத்திலும் பாஜக ஆட்சி செய்தால்தான் மத்திய அரசிடமிருந்து வளர்ச்சிக்கான திட்டங்களை எளிதில் பெற முடியும். முன்பெல்லாம் மத்திய அமைச்சர்களை பார்ப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால், தற்போது ஒரே அரசாங்கம் இருப்பதால் எளிதில் பார்க்க முடிகின்றது. இதெல்லாம் மக்கள் புரிந்து வாக்களிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com