மாநிலங்களவை மார்ச் 13 வரை ஒத்திவைப்பு: பட்ஜெட் தொடரின் முதல் பாதி நிறைவு!

மாநிலங்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி நிறைவடைந்த நிலையில் மார்ச் 13ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை மார்ச் 13 வரை ஒத்திவைப்பு: பட்ஜெட் தொடரின் முதல் பாதி நிறைவு!

மாநிலங்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி நிறைவடைந்த நிலையில் மார்ச் 13ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 10 நாள்களாக இரு அவைகளிலும் அதானி குழும முறைகேடு புகார் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பட்ஜெட் தொடரின் முதல் பாதியின் கடைசி நாளான இன்று காலை முதல் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகள் முடங்கியது.

தொடர்ந்து, முதல் பாதி நிறைவு பெறுவதாக அறிவித்து மார்ச் 31ஆம் தேதி வரை மாநிலங்களவை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com