அதிகாரம் யாரிடமும் நிரந்தரமாக இருக்காது: அஜித் பவார்

 மகாராஷ்டிரம் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தொடர்பான மனுக்கள் மீதான நீதிமன்றத் தீர்ப்புகள் நிலுவையில் இருப்பதால், மகாராஷ்டிரம் அரசு மீண்டும் கவிழக்கூடும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

புணே (மகாராஷ்டிரம்):  மகாராஷ்டிரம் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தொடர்பான மனுக்கள் மீதான நீதிமன்றத் தீர்ப்புகள் நிலுவையில் இருப்பதால், மகாராஷ்டிரம் அரசு மீண்டும் கவிழக்கூடும் என்று தேசிய காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர் அஜித் பவார் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

முந்தைய மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார், அதிகாரம் யாரிடமும் நிரந்தரமாக இருக்காது என்பதால் அதிகாரங்கள் கை மாறுவதற்கான வழி உள்ளது என்று கூறினார். 

கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி கஸ்பா பெத் தொகுதி பேரவை உறுப்பினர் முக்தா திலக் மரணமடைந்ததை அடுத்து பிப்ரவரி 26-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 2 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

இந்நிலையில், புணேயில் நடைபெற்ற கஸ்பா சட்டப்பேரை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஜித் பவார் பேசினார். 

அப்போது, "அதிகாரம் யாரிடமும் நிரந்தரமாக இருக்காது. அதிகாரம் வெள்ளிக் கரண்டியுடன் பிறப்பதில்லை. அதிகாரம் வரும், போகும். மகாராஷ்டிரம் அரசியல் நெருக்கடி தொடர்பான மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இன்னும் வரவில்லை. தேர்தல் ஆணையத்தின் முடிவு இன்னும் வரவில்லை, எதுவும் நடக்கலாம், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், மீண்டும் (அரசாங்கம்) மாறலாம். இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்" என்று பவார் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

சிவசேனையில் ஏற்பட்ட பிளவால் கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தலைமை தாங்கிய ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா்.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு அரசியல் நெருக்கடி தொடர்பாக உத்தவ் தாக்கரே மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தாக்கல் செய்த ஒரு தொகுதி மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ள நிலையில், போட்டி சிவசேனைகளுக்கு இடையேயான முதன்மைப் போராட்டம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது.

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி, ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஜனவரி 10 ஆம் தேதி, “மகாராஷ்டிரம் அரசியல் நெருக்கடி தொடர்பான மனுக்களை பிப்ரவரி 14 ஆம் தேதி விசாரிப்போம்." என்று தெரிவித்துள்ளது. 

முன்னதாக, உத்தவ் தாக்கரே தலைமையிலான குழு உச்ச நீதிமன்றத்தில், மகாராஷ்டிரத்தில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான அரசு இயங்குகிறது என்று கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com