குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிபதியாக சோனியா கோகானி பதவியேற்பு!

குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி சோனியா கோகானி பதவியேற்றுள்ளார். 
குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிபதியாக சோனியா கோகானி பதவியேற்பு!

குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி சோனியா கோகானி பதவியேற்றுள்ளார். 

காந்தி நகரில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நீதிபதி கோகானிக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை சாபநாயகர் சங்கர் சௌத்ரி, உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி, முதல்வர் பூபேந்திர படேல், மாநில சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரிஷிகேஷ் படேல் ஆகியோர் கலந்துகொண்டனர். 

நீதிபதி கோகானியின் நியமனம் பிப்ரவரி 12 அன்று மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது, மேலும் அவர் பிப்ரவரி 13 முதல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். 

குஜராத்தின் ஜாம்நகரில் பிப்ரவரி 26, 1961 இல் பிறந்த அவர், பிப்ரவரி 17, 2011-ல் குஜராத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக உயர்த்தப்பட்டு, ஜனவரி 28, 2013 அன்று நிரந்தர நீதிபதியாக உறுதி செய்யப்பட்டார்.

ஜூலை 10, 1995 அன்று அகமதாபாத்தில் உள்ள நகர சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதியாக நேரடியாக நீதித்துறையில் சேர்ந்தார், மேலும் பல உரிமையியல் மற்றும் குற்றவியல் விவகாரங்களுக்குத் தலைமை தாங்கினார்.

நீதிபதி கோகானி, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றினார், 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com