

மேகாலயாவின் கிழக்கு காசி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நில அதிர்வு மையம் கூறுகையில்,
இந்த நிலநடுக்கம் 3.9 ரிக்டர் அளவில் பதிவானது. காலை 9:26 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தின் மையம் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் பூமியின் மேலோட்டத்திற்கு அடியில் சுமார் 46 கி.மீ ஆழத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.