92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விளையாட்டில் திறமையுள்ளவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி

விளையாட்டுத் துறையில் திறமை வாய்ந்தவர்களைக் கண்டறிந்து அவர்களின் திறமையை மேம்படுத்த உதவ வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :16 பிப்ரவரி 2023, 12:51 pm

DIN

விளையாட்டுத் துறையில் திறமை வாய்ந்தவர்களைக் கண்டறிந்து அவர்களின் திறமையை மேம்படுத்த உதவ வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்காக மத்திய பட்ஜெட்டில் செலவிடும் தொகையினை அதிகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் விளையாட்டுத் துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி உத்தரப் பிரதேசத்தின் கோராக்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். 

இந்த நிகழ்வில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கிஷான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.