தாய் மொழியில் கற்க, கற்பிக்க யுஜிசி வலியுறுத்தல்!

தாய் மொழியில் கற்கவும், கற்பிக்கவும் ஊக்குவிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு பல்கலைக் கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஸ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தாய் மொழியில் கற்கவும், கற்பிக்கவும் ஊக்குவிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு பல்கலைக் கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஸ் குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மாநில ஆளுநர் மற்றும் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், தாய் மொழியில் கற்க வேண்டும் என்பது தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்று. தய் மொழியில் கற்பதையும், கல்வி கற்பிப்பதையும் இது ஊக்குவிக்கிறது. 

பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் தாய்மொழி அல்லது உள்ளூர் மொழிகளில் பயிற்றுவிப்பது ஒரு அங்கமாக்கப்பட்டுள்ளது. தொலைதூர மற்றும் கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும். இதனால், அனைத்து மாநிலங்களிலும் உள்ளூர் அல்லது தாய் மொழியில் கற்பிக்கவும் கற்கவும் ஊக்குவிக்க வேண்டும்.

அறிவியல், வணிகம் போன்ற பிரிவுகளில் பல பாடப்புத்தகங்களும், கல்வி சார்ந்த பிற புத்தகங்களும் தாய் மொழிகளில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதன் முதல்படியாக தரமான கல்வியை வழங்குவதற்காக தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி வழிக் கல்வி ஊக்குவிக்கப்படுகிறது. இதன் விளைவாக மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் தேவையான பாடநூல்கள் உள்ளூர் மொழிகளில் பெயர்க்கப்படும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com