மீள்வது எப்படி? புதிய திட்டங்களை தீட்டும் அதானி 

துறைமுகங்கள் முதல் சுரங்கம் வரை பல தொழில்களில் கொடிகட்டிப்பறந்த, ஆசியாவின் மிகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அதானி, வீழ்ச்சியிலிருந்து மீள்வது எப்படி என்ற திட்டத்தை வகுத்துவிட்டார்.
மீள்வது எப்படி? புதிய திட்டங்களுடன் வருகிறார் அதானி 
மீள்வது எப்படி? புதிய திட்டங்களுடன் வருகிறார் அதானி 


துறைமுகங்கள் முதல் சுரங்கம் வரை பல தொழில்களில் கொடிகட்டிப்பறந்த, ஆசியாவின் மிகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அதானி, வீழ்ச்சியிலிருந்து மீள்வது எப்படி என்ற திட்டத்தை வகுத்துவிட்டார்.

அதானி குழும பங்குகளின் விலை மிகைப்படுத்தி விற்பனை செய்யப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளதாக அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் குற்றம்சாட்டி ஜனவரி 24ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. இதனால் அதானி குழு பங்குகள் 132 பில்லியன் டாலா் அளவுக்கு சரிவடைந்தன.

பங்குச் சந்தையில் தொடர் வீழ்ச்சியை சந்தித்து வரும் அதானி குழுமம், உடனடியாக மீள்வது எப்படி என்ற உக்தியை வகுத்துள்ளது. இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த நெருக்கடி மீட்பு மற்றும் சட்டக் குழுவின் உதவியை நாடியிருக்கிறது.

850 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிலக்கரி ஆலையை வாங்கும் திட்டத்தை கைவிடுவது, செலவினத்தைக் கட்டுப்படுத்துவது, சில கடன்களை மீண்டும் செலுத்துவது, சில கடன்களை விரைவில் தருவதாக உறுதியளிப்பது போன்றவற்றில் இந்த அமெரிக்க நெருக்கடிகால மீட்பு நிறுவனத்திடம் அதானி குழுமம் ஆலோசனை கோரியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுரங்கம் முதல் மின்துறை வரை பல தொழில்களில் ஈடுபட்டுவரும் அதானி, ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையைத் தொடர்ந்து நேரிட்ட வீழ்ச்சியில் இருந்து விரைவாக மீண்டு பழைய நிலையை எட்டுவது மற்றும் எழுச்சியடைந்திருக்கும் கடன் அளித்தோர் மற்றும் முதலீட்டாளர்களை அமைதிப்படுத்துவது ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தவிருக்கிறது.

முறைகேடு, பங்குச் சந்தையில் மோசடி மற்றும் இதர பெருநிறுவன முறைகேடுகள் இருப்பதாக அதானி குழுமத்தின் மீது அந்த ஆய்வறிக்கை குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அதானி குழுமம் மறுத்துவிட்டது.

இதையும் படிக்க.. தில்லி-மும்பை விரைவுச் சாலையில் இந்த வாகனங்களுக்கு அனுமதி இல்லை; ஏன்?

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது முதலே, இதனை சரி செய்யும் பணியை அதானி மற்றும் அவரது உதவியாளர்கள் இறங்கிவிட்டனர். சில கடன்களுக்கு முன்பணம் அளித்து பொறுப்பான கடன்காரர்களைப் போல தங்களை வெளிக்காட்டுவது, கடன் நிலுவைகளை உடனுக்குடன் அளிப்பது, கிட்டத்தட்ட 8 பில்லியன் டாலர்களை அதானி குழுமத்தின் பல நிறுவனங்களில் முதலீடு செய்து, தற்போதைய செய்தியால் நிலைகுலைந்துபோயிருக்கும் பல உலக நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் செயற்குழு தலைவர்கள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதானி குழுமத்தின் மீது ஏற்பட்டிருக்கும் களங்கத்தின் தீவிரத்தை அந்தக் குழுமம் மிக நன்றாகவே உணர்ந்திருக்கிறது. இதனால்தான், அமெரிக்காவின் கெக்ஸ்ட் சிஎன்சி என்ற சர்வதேச தொடர்பு ஆலோசனை நிறுவனத்தை பணிக்கு நியமித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நியூ யார்க்கை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், அண்மையில் நெருக்கடியில் சிக்கிய நிறுவனங்களுடன் தொடர்ந்து இயங்கி வருவதால், அதானி குழுமத்தின் நெருக்கடி நிலையை அது வெகு லாவகமாக கையாண்டு, வெளிக்கொண்டுவந்துவிடும் என்று அதானி குழுமம் நம்புகிறது.

மிகச் சிறப்பான செயல்பாடுகள் மூலம், முதலீட்டாளர்களுக்கு மீண்டும் பழைய நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கிய வேலையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதானியின் சி-சூட் மற்றும் தொலைத்தொடர்பு குழுவினருடன் கெக்ஸ்ட் ஆலோசனை நடத்தி, தற்போதையை நிலையை ஆராய்ந்து வருவதாகவும், குழுமத்துக்கு எதிரான டிவிட்டர் பதிவுகள், ஊடகவியலாளர்களிடமிருந்து வரும் அழைப்புகள், இதர அழுத்தம் தரக்கூடிய தகவல்களை அதானி குழுமம் பகிர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com