மேலும் 2 எம்.பி.க்கள் எங்கள் அணிக்கு வருவார்கள்: ஷிண்டே அணி தகவல்

மேலும் 2 எம்.பி.க்கள் எங்கள் அணிக்கு வருவார்கள் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினர் தெரிவித்துள்ளனர். 
மேலும் 2 எம்.பி.க்கள் எங்கள் அணிக்கு வருவார்கள்: ஷிண்டே அணி தகவல்


மும்பை: மேலும் 2 எம்.பி.க்கள் எங்கள் அணிக்கு வருவார்கள் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினர் தெரிவித்துள்ளனர். 

மகாராஷ்டிர முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 சிவசேனை எம்எல்ஏக்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போா்க்கொடி உயா்த்தினா். இதையடுத்து, சிவசேனை இரு அணிகளாக பிளவுபட்டது.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தரப்பு தாங்கள் தான் உண்மையான சிவசேனை என கூறியுள்ளது. 

கட்சியின் பெயா், ‘வில்-அம்பு’ சின்னத்துக்கு இரு அணிகளும் உரிமை கோரிய நிலையில், ஷிண்டே பிரிவு சிவசேனைக்கு தோ்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கியது. இது, உத்தவ் தாக்கரே தரப்புக்கு பின்னடைவாக அமைந்தது.

இரு அணிகளுக்கும் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்களின் பலம் மற்றும் தோ்தலில் அவா்கள் பெற்ற வாக்குகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், கட்சியின் சின்னம் மற்றும் பெயரை ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கி, தோ்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

தோ்தல் ஆணையத்தின் முடிவை விமா்சித்த உத்தவ் தாக்கரே, அதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று தெரிவித்தாா்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் இரு அணிகளும் தரப்பினரும் தங்களுக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ஆதரவு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தனர். 

இதில், உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த 6 எம்.பி.க்களில் 4 பேர் மட்டுமே அவருக்கு ஆதரகவாக பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

எனவே, அந்த 2 எம்.பி.க்களும் தங்களுக்கு அணிக்கு வருவார்கள் என ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து ஷிண்டே தரப்பு எம்.பி. கிருபால் துமனே கூறுகையில், மேலும் 2 எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக பிராமண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்ற தகவலை சஞ்சய் ரெளத் எம்.பி. மறுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com