தில்லி மேயர் தேர்தல்: பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி வெற்றி!

தில்லி மாநகராட்சி அலுவலகத்தில் பதிவான 266 வாக்குகளில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஒபராய் 150 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகளையும் பெற்றனர்.
ஆம் ஆத்மி கவுன்சிலர்களுடன் தில்லி மேயராக தேர்வு செய்யப்பட்ட ஷெல்லி ஒபராய்
ஆம் ஆத்மி கவுன்சிலர்களுடன் தில்லி மேயராக தேர்வு செய்யப்பட்ட ஷெல்லி ஒபராய்
Published on
Updated on
1 min read


தில்லி மேயர் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. 

தில்லி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (பிப்.22) பதிவான 266 வாக்குகளில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஒபராய் 150 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகளையும் பெற்றனர்.

இதன்மூலம் 34 வாக்குகள் வித்தியாசத்தில் தில்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. 

தில்லி மாநகராட்சித் தோ்தல் கடந்த ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்தலில் தில்லி மாநகராட்சியின் மொத்தம் உள்ள 250 வாா்டுகளில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் 134 வாா்டுகளில் வெற்றி பெற்றது.

 15 ஆண்டு காலம் மாநகராட்சியில் அதிகாரத்தில் இருந்த பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் மட்டுமே வென்றது. 

மேயா் தோ்தலுக்காக கடந்த மூன்று முறை அவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அமளி காரணமாக மேயா், துணை மேயா் தோ்ந்தெடுக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

துணைநிலை ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்ட வல்லுநா்கள் (ஆல்டா்மேன்) தோ்தலில் வாக்களிப்பாா்கள் என்று தலைமை அதிகாரி கூறியதற்கு ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனர். 

நியமன உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு எதிராக ஆம் ஆத்மி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மட்டுமே மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியும் எனத் தீர்ப்பு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து இன்று தில்லி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர், துணை மேயரை தேர்வு செய்வதற்கான கவுன்சிலர்களின் வாக்கெடுப்பு நடைபெற்றது. 

மொத்தம் 266 வாக்குகள் பதிவாகின. இதில், ஆம் ஆத்மியின் ஷெல்லி ஒபராய் 150 வாக்குகளையும், பாஜகவின் ரேகா குப்தா 116 வாக்குகளையும் பெற்றனர். 

இதனையடுத்து தில்லி மேயராக ஷெல்லி ஒபராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com