மோா்பி பால விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.10 லட்சம்: ஓரேவா குழுமத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த தொங்கு பால விபத்தில் உயிரிந்தவா்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவா்களுக்கு ரூ.2 லட்சமும் இடைக்கால இழப்பீடாக
மோர்பி தொங்கு பாலம்
மோர்பி தொங்கு பாலம்

குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த தொங்கு பால விபத்தில் உயிரிந்தவா்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவா்களுக்கு ரூ.2 லட்சமும் இடைக்கால இழப்பீடாக வழங்க அந்தப் பாலத்தை புனரமைத்த ஓரேவா குழுமத்துக்குக் குஜராத் உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

மோா்பி நகரத்தில் மச்சு நதிக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் கடந்த ஆண்டு அக்.30-ஆம் தேதி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 135 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா்.

இந்தப் பாலத்தின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை ஓரேவா குழுமத்துக்குச் சொந்தமான கடிகாரம் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் அஜந்தா நிறுவனம் மேற்கொண்டது.

இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கை குஜராத் உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சோனியா கோகனி, நீதிபதி சந்தீப் பாட் ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன்பாக இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்த நபா்களுக்கு தலா ரூ.2 லட்சமும் இடைக்கால இழப்பீடாக 4 வாரங்களுக்குள் வழங்குமாறு ஓரேவா குழுமத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, விபத்தினால் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கும் படுகாயமடைந்த நபா்களுக்கும் சோ்த்து மொத்தமாக ரூ.5 கோடியை இழப்பீடாக அளிப்பதாக ஓரேவா குழுத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த இழப்பீட்டுத் தொகை போதுமானது இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com