போர்க்களமான தேர்தல் களம்! 13 முறை ஒத்திவைக்கப்பட்ட தில்லி மாநகராட்சிக் கூட்டம்

தில்லி மேயர் தேர்தலில் நேற்று இரவு பெண் கவுன்சிலர்கள் அடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
போர்க்களமான தேர்தல் களம்! 13 முறை ஒத்திவைக்கப்பட்ட தில்லி மாநகராட்சிக் கூட்டம்
Published on
Updated on
1 min read

தில்லி மேயர் தேர்தலில் நேற்று இரவு பெண் கவுன்சிலர்கள் அடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தில்லி மாமன்றக் கூட்டம் இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று இன்று காலை 13வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆம் ஆத்மி மற்றும் பாஜக கவுன்சிலர்கள் மோதலால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட தில்லி மேயர் தேர்தல் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து நேற்று(புதன்கிழமை) நடைபெற்றது.

காலை 11.30 மணியளவில் தில்லி மேயர் தேர்தல் தொடங்கிய நிலையில், மேயா், துணை மேயரை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.

மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா் ஷெல்லி ஓபராய் 34 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். அதேபோல், துணை மேயருக்கான தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா் ஆலே முகம்மது இக்பால் 31 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

இதனைத் தொடர்ந்து, 6 நிலைக் குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கியபோது அமளி ஏற்பட்டது. வாக்களிக்க கைப்பேசியை எடுத்துவருவதற்கு உறுப்பினா்களை அனுமதிக்க ஷெல்லி ஓபராய் முடிவு செய்ததற்கு பாஜக கவுன்சிலா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் இந்த அமளி ஏற்பட்டது.

தொடர்ந்து, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக பாஜக கவுன்சிலர்கள் முழக்கம் எழுப்பியதால், இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். இரு கட்சிகளை சேர்ந்த பெண் கவுன்சிலர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

மேலும், தேர்தல் நடைபெறும் அரங்கில் இருந்த இருக்கைகள், வாக்குப் பெட்டிகள் உள்ளிட்டவை கவுன்சிலர்களால் உடைக்கப்பட்டன.

கவுன்சிலர்களின் அமளியால் தில்லி மாநகராட்சி தேர்தல் கூட்டம் இரவு முழுவதும் 13 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், காலை 8 மணிக்கு மீண்டும் ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com