மணீஷ் சிசோடியாவுக்கு மருத்துவப் பரிசோதனை!

தில்லியில் மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மருத்துவர்கள் குழு திங்கள்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்தனர். 
மணீஷ் சிசோடியாவுக்கு மருத்துவப் பரிசோதனை!

தில்லியில் மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மருத்துவர்கள் குழு திங்கள்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்தனர். 

சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கருத்தில் கொண்டு சிசோடியாவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாததால், மத்தியப் புலனாய்வுத் துறை(சிபிஐ) தலைமையகத்தில் மருத்துவப் பரிசோதனை நடத்தியது. 

பரிசோதனையில் அவரின் உடல்நிலை இயல்பாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், சிசோடியா ரூஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். சிசோடியாவை இரண்டு வாரங்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முன்னதாக, அவரை காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தி விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தது. 

தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. மூன்று மாதங்களுக்கு முன்பாக இது குறித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதமும் சோதனை நடைபெற்ற நிலையில், மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியது.தில்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் மதுபானக் கொள்கை மாற்ற மோசடி வழக்கில் சிபிஐக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட விசாரணைக்கு பிப்.19 ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் மணீஷ் சிசோடியா தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜரானார். இதையடுத்து சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. 

தெற்கு தில்லியில் ராஜ்காட்டில் பிரார்த்தனைக்கு சென்ற சிசோடியாவை கைது செய்யப்படுவதற்கு முன்பு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com