'தமிழ்நாட்டுப் பெண்களின் பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன்' - குஷ்பு

தில்லியில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்..
'தமிழ்நாட்டுப் பெண்களின் பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன்' - குஷ்பு

தில்லியில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

நடிகை குஷ்பு கடந்த 2010-ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தாா். 2014-இல் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தாா். பின்னா், காங்கிரஸிலிருந்தும் விலகி பாஜகவில் இணைந்தாா்.

2021 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். பின்னா், அவருக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் பதவி வழங்கப்பட்டது. தற்போது தேசிய மகளிா் ஆணைய உறுப்பினராக அவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இவர் 3 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த பதவியில் இருப்பார். 

பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அனைத்து இடங்களிலும் நடக்கின்றன. தற்போது அதிகமாக இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க என்னால் என்ன செய்ய முடியுமோ கண்டிப்பாக செய்வேன். தமிழ்நாட்டில் இருந்து வந்திருப்பதால் தமிழ்நாட்டுப் பெண்களின் பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன்' என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com