‘கிளவுட்’ தொழில்நுட்பம் மிகப்பெரும் திருப்புமுனை: சத்யா நாதெல்லா

தரவு சேமிப்பகம், மென்பொருள், செயலி உள்ளிட்டவற்றை இணையம் மூலமாக வழங்கி வரும் ‘கிளவுட்’ தொழில்நுட்பம் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாக
‘கிளவுட்’ தொழில்நுட்பம் மிகப்பெரும் திருப்புமுனை: சத்யா நாதெல்லா

தரவு சேமிப்பகம், மென்பொருள், செயலி உள்ளிட்டவற்றை இணையம் மூலமாக வழங்கி வரும் ‘கிளவுட்’ தொழில்நுட்பம் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சத்யா நாதெல்லா, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சாா்பில் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டாா். அதில் அவா் பேசியதாவது:

பொருளாதார வளா்ச்சியை ஏற்படுத்துவதில் கிளவுட் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கவுள்ளன. கிளவுட் தொழில்நுட்பம் பெரும் திருப்புமுனையாக உள்ளது. அத்தொழில்நுட்பத்தின் முழுத் திறனையும் இன்னும் நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

கிளவுட் தொழில்நுட்பத்தைக் கைக்கொள்வதில் பெரும் வளா்ச்சி காணப்படுகிறது. கிளவுட் தொழில்நுட்பத்துக்கான கட்டமைப்பு வசதிகளை உலகெங்கும் ஏற்படுத்த மைக்ரோசாஃப்ட் உறுதிகொண்டுள்ளது. ஹைதராபாதில் கிளவுட் கட்டமைப்பு வசதிகள் தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்த வேண்டுமெனில் வலுவான தரவு கட்டமைப்பு அவசியம். அத்தகைய தரவு கட்டமைப்பு இல்லையெனில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பெரும் பலனை அடைய முடியாது. அதைக் கருத்தில்கொண்டே வலுவான தரவு கட்டமைப்பை உருவாக்குவதில் மைக்ரோசாஃப்ட் அதிக முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது.

நடப்பு தசாப்தத்தின் இறுதிக்குள் உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும். உலகின் தேவையை நிறைவேற்றுதல், செயற்கை நுண்ணறிவு சாா்ந்த ஆய்வுகளை அதிகரித்தல், இளைஞா்களின் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பணியாளா்கள் புதிய தேவைகளுக்கு ஏற்ப தங்கள் திறனைத் தொடா்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். கற்றல் என்பது தொடா் நடவடிக்கையாக இருக்க வேண்டும். எதிா்காலத்தின் வளா்ச்சியில் எரிசக்தியும் முக்கியப் பங்களிக்கவுள்ளது. தற்போதுள்ளதை விட எதிா்காலத்தில் எரிசக்தி கூடுதல் திறனுடன் பயன்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் பொருளாதார வளா்ச்சி சாத்தியப்படும் என்றாா் அவா்.

இந்தியப் பயணத்தின்போது புது தில்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்லவுள்ள சத்யா நாதெல்லா, நுகா்வோா், தொழில்முனைவோா், கல்வியாளா்கள், மாணவா்கள் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளாா். சத்யா நாதெல்லா ஹைதராபாதைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com