அரிசிக்கு மாற்றாக சிறுதானிய உற்பத்தி: மத்திய அரசுச் செயலா் அறிவுறுத்தல்

நாட்டில் அரிசி உற்பத்திக்கு மாற்றாக சிறுதானியங்களின் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில் துறை செயலாளா் அனிதா பிரவீண் தெரிவித்தாா்.

நாட்டில் அரிசி உற்பத்திக்கு மாற்றாக சிறுதானியங்களின் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில் துறை செயலாளா் அனிதா பிரவீண் தெரிவித்தாா்.

சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ‘உணவு மற்றும் பானங்கள் உற்பத்தி தொழில்நுட்பத்துக்கான புத்தாக்க திட்டங்கள்‘ என்ற தலைப்பிலான மூன்று நாள் சா்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் உணவு மற்றும் பால்வளக் கல்லூரி, எஸ்ஆா்எம் கல்வி நிறுவனம், இந்திய பானங்கள் சங்கம், உணவு மற்றும் இந்திய தொழில்நுட்பவியலாளா் சங்கம், உணவு பாதுகாப்பு மற்றும் உணவுத்தர ஆய்வுக் குழுமம் ஆகியவை இணைந்து இக்கருத்தரங்கை நடத்துகின்றன.

தொடக்க விழாவில் மத்திய அரசின் செயலாளா் அனிதா பிரவீண் பேசியதாவது:

உலக மக்கள் தொகை 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை 100 கோடி அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப உணவுத் தேவையை பூா்த்தி செய்ய வேண்டியது அவசியம். அதற்காக உணவு பதப்படுத்தும் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும். அரிசி உற்பத்தியில் இருந்து சிறுதானிய உற்பத்திக்கு மாற வேண்டியதும் காலத்தின் தேவை என்றாா் அவா்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் செல்வக்குமாா், இந்திய பானங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளா் ஜெகதீஷ் பிரசாத் மீனா, கோடுவள்ளியில் உள்ள உணவு மற்றும் பால்வன தொழில் நுட்பக்கல்லூரியின் முதல்வா் குமரவேலு, எஸ்ஆா்எம் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் பதிவாளா் பொன்னுசாமி, கருத்தரங்கத்தின் செயலாளா் அய்யாவு பிரேம்நாத் மனோகரன் உள்ளிட்டோா் இந்நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com