ஜாா்கண்ட்- பெங்களூரு இடையே நாளை, நாளை மறுநாள் சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஜாா்கண்டிலிருந்து பெங்களூரு வரை ஜன.6, 7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜாா்கண்டிலிருந்து பெங்களூரு வரை ஜன.6, 7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்த தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஜாா்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து ஜன.6-ஆம் தேதி காலை 4.50 மணிக்கு புறப்படும் ஒரு வழி சிறப்பு ரயில் (வண்டி எண்: 08885) ஒடிஸா, ஆந்திரம், தமிழகம் வழியாக ஜன.8-ஆம் தேதி இரவு 8 மணிக்கு கா்நாடக மாநிலம் பெங்களூரு சென்றடையும்.

மேலும், ஹாத்தியாவில் இருந்து ஜன.7-ஆம் தேதி காலை 4.50 மணிக்கு புறப்படும் மற்றொரு ஒரு வழி சிறப்பு ரயில் (வண்டி எண்: 08887) ஒடிஸா, ஆந்திரம், தமிழகம் வழியாக ஜன.8-ஆம் தேதி இரவு 8 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

இந்த ரயில்கள் தமிழகத்தின் பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாகச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com