
இந்தியாவின் மூவர்ணக் கொடியை மாற்றி காவிக் கொடியைக் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியலமைப்பை பாஜக அழித்து விடும் எனவும் அவர் தெரிவித்தார். தனது தந்தையின் 7-வது ஆண்டு நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்ந்த முப்தி இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: இந்தியா தொடர்: பிரபல நியூசி. வீரர் விலகல்!
தந்தையின் 7-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலிக்குப் பிறகு பேசிய மெகபூபா முப்தி கூறியதாவது: எனது தந்தைக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. ஒரு நாடு எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் அதனால் தனது சொந்த மக்களை எதிர்த்து வெல்ல முடியாது. இது உண்மையில்லை என்றால் அமெரிக்கா வியட்நாமில் இருந்து வெளியேறி இருக்காது. பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் என்ற நாடு உருவாகியிருக்காது. பாஜக நாட்டினுடைய தேசியக் கொடியை மாற்றி அதன் இடத்தில் காவிக் கொடியை ஏற்றும். நாங்கள் நாட்டு மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். பாஜக கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பை மீறி விட்டது. இனி வரும் காலங்களில் அரசியலமைப்பு பாஜக அழிக்கும். பாஜக ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பை மட்டும் மீறவில்லை. ஆனால், இந்திய அரசியல் அமைப்பையும் மீறியுள்ளது. அரசியலமைப்பு சட்டவிதி 370-ஐ நீக்கியதன் மூலம் இந்திய அரசியலமைப்பை பாஜக மீறியுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.