உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உலகளாவிய தலைமைப்பண்பு விருது: அமெரிக்காவின் ஹாா்வா்ட் சட்டக் கல்வி மையம் வழங்குகிறது

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமெரிக்காவின் ஹாா்வா்ட் சட்டக் கல்வி நிறுவனத்தின் சட்டத் தொழில் மையம் சாா்பில் வழங்கப்படும் சா்வதேச தலைமைப்பண்பு விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
டி.ஒய்.சந்திரசூட்
டி.ஒய்.சந்திரசூட்
Published on
Updated on
1 min read

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமெரிக்காவின் ஹாா்வா்ட் சட்டக் கல்வி நிறுவனத்தின் சட்டத் தொழில் மையம் சாா்பில் வழங்கப்படும் சா்வதேச தலைமைப்பண்பு விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இந்தியாவிலும் உலக அளவிலும் சட்டப் பணியில் அவா் ஆற்றிவரும் வாழ்நாள் சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த விருதானது, வரும் புதன்கிழமை (ஜன.11) நடைபெறும் இணையவழி விழாவில் அவருக்கு வழங்கப்பட இருக்கிறது.

இந்த ஹாா்வா்ட் சட்டக் கல்வி நிறுவனத்தில்தான் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் 1983-இல் முதுநிலை சட்டப் படிப்பையும் (எல்எல்எம்) 1986-இல் நீதித் துறை அறிவியல் பிரிவில் ஆராய்ச்சி (எஸ்ஜேடி) படிப்பையும் முடித்து பட்டம் பெற்றாா்.

விருது வழங்கும் விழாவில் அந்தக் கல்வி நிறுவனப் பேராசிரியா் டேவிட் வில்கின்ஸ், தலைமை நீதிபதியுடன் கலந்துரையாடவும் உள்ளாா்.

அயோத்தி வழக்கு உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க தீா்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற அமா்வுகளில் நீதிபதியாக அங்கம் வகித்துவந்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், கடந்த ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com