கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு 15 நாட்களில் அனுமதி: சீரம் நிறுவனம்

கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் அனுமதி கிடைத்துவிடும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆடார் பூனேவாலா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் அனுமதி கிடைத்துவிடும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அடார் பூனேவாலா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

புணோவில் உள்ள பாரதி வித்யாபீத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய பூனேவாலா, அடுத்த 10-15 நாட்களில் கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்துவிடும் என்று தெரிவித்தார்.

கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டை விட ஒமிக்ரானுக்கு எதிராக மிகவும் சிறப்பாக செயல்படும் என்றும், கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசிடம் போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் பூனேவாலா கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பூனேவாலாவுக்கு டாக்டர் பதங்ராவ் கதாம் நினைவு விருதை என்சிபி கட்சித் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் வழங்கினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com