
கொல்கத்தாவிலிருந்து பான் மசலா பாக்கெட்டுகளுடன் தாய்லாந்து செல்ல முயன்ற நபரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ.32 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா பாக்கெட்டுகளும் அமெரிக்க ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன.
கொல்கத்தவிலிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு பான்மசாலா கடத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து கொல்கத்தா விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தாய்லாந்து செல்லவிருந்த நபரின் பைகளில் பான் மசாலா பாக்கெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றின் மதிப்பு அமெரிக்க டாலர் மதிப்பில் 4 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.32,78,000) என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், 10 ரூபாய் தாள்கள் அடங்கிய அமெரிக்க டாலர்களும் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.