2022-ம் ஆண்டில் 6900 குடும்ப வன்முறை வழக்குகள்: எந்தப் பிரிவில் எத்தனை குற்றங்கள்?

நாட்டில் 2022 ஆம் ஆண்டில் 6900 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகி உள்ளதாக தேசிய மகளிர் ஆணைய புள்ளிவிவரங்கள் திரிவிக்கின்றன. 
2022-ம் ஆண்டில் 6900 குடும்ப வன்முறை வழக்குகள்: எந்தப் பிரிவில் எத்தனை குற்றங்கள்?
Published on
Updated on
1 min read

புதுதில்லி: நாட்டில் 2022 ஆம் ஆண்டில் 6900 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகி உள்ளதாக தேசிய மகளிர் ஆணைய புள்ளிவிவரங்கள் திரிவிக்கின்றன. 

நாட்டில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன. திருமணமான பெண்களுக்கு வரதட்சணை மற்றும் துன்புறுத்தல் புகார்கள் 15 சதவீதமாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்திலும், தலைநகர் தில்லி இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவாகியுள்ள வழக்குகளின் புள்ளிவிவரம் வருமாறு: 

கடந்த 2022-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 30,900 வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக 6,900 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது மொத்த வழக்குகளில் 23 சதவீதமாகும். குடும்ப வன்முறை வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த 2020 இல் கரோனா தொற்று பரவல்களின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 23,700 ஆக இருந்தது, இது 2021 இல் 30,800 ஆகவும், 2022 இல் 30,900 ஆகவும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு கரோனா தொற்று பரவலில் இருந்து உலக நாடுகள் மீண்டு வந்த போது கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. 

எந்தப் பிரிவில் எத்தனை குற்றங்கள் வழக்குகள் பதிவாகியுள்ளன?
கடந்த ஆண்டு, மூன்று வெவ்வேறு பிரிவுகளில் அதிக புகார்கள் அளிக்கப்பட்டன.  31 சதவீத புகார்கள் கண்ணியத்துடன் வாழும் உரிமைக்காக வழக்குகள் பதிவாகி உள்ளன.  குடும்ப வன்முறை மற்றும் பிற புகார்கள் 23 சதவீதமும், திருமணமான பெண்களுக்கு வரதட்சணை மற்றும் துன்புறுத்தல் புகார்கள் 15 சதவீதம் பதிவாகி உள்ளன. 

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம் 55 சதவீதம் வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. தலைநகர் தில்லி 10 சதவீதம், மகாராட்டிரம் 5 சதவீத வழக்குளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளன. 

கடந்த 2021-ஆம் ஆண்டில் கூட இந்த 3 மாநிலங்களில் இருந்துதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக வழக்குகள் பதிவாகின என புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறியிருப்பதாவது: பொது விசாரணை மற்றும் பெண்களுக்கான ஹெல்ப்லைன் தொடங்கப்பட்ட பிறகு, ஆணையத்திற்கு வரும் புகார்கள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com