பாஸ்மதி அரிசிக்கு செயற்கை நிறமூட்டத் தடை!

இந்தியாவில் முதல் முறையாக பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கத் தடை விதித்து உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

இந்தியாவில் முதல் முறையாக பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கத் தடை விதித்து உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்தியாவின் இமயமலை பகுதிகள் மற்றும் பாகிஸ்தானையொட்டிய பகுதிகளில் பாஸ்மதி வகை அரிசி விளைவிக்கப்படுகின்றன. இந்த அரசி வகை இயற்கையாகவே நீளமானதாகவும் மனமுடையதாகவும் உள்ளன. 

இந்த அரிசி மூலம் பிரியாணி போன்ற விலையுயர்ந்த உணவுகளை சமைப்பதன் மூலம்,  ஒருசில நிறுவனங்கள் நிறமூட்டி, செயற்கை மணம் செலுத்தி போலி பாஸ்மதி அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றன.

இதனை கட்டுப்படுத்த தற்போது அரசு உணவு தர பாதுகாப்பு நிர்ணயம் புதிய விதிகளை விதித்துள்ளது. அதன்படி செயற்கையாக நிறமூட்டி, மணம் சேர்த்து விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. 

இந்தத் தடை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. ஏனென்றால் அடைக்கப்பட்ட பாஸ்மதி அரிசி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அவற்றின் விற்பனை பாதிக்கப்படக் கூடாது என ஆகஸ்ட் மாதம் முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com