ஒரு பக்கம் விடுமுறை.. மறுபக்கம் இப்படி ஒரு செய்தி

மறுபக்கம் மூணாறு சுற்றுலாத் தலம் உறைபனியால் புதிய தோற்றப்பொலிவுடன் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பக்கம் விடுமுறை.. மறுபக்கம் இப்படி ஒரு செய்தி
ஒரு பக்கம் விடுமுறை.. மறுபக்கம் இப்படி ஒரு செய்தி


மூணாறு: பொங்கல், மாட்டுப் பொங்கல் என ஒரு பக்கம் பண்டிகையும், அதனை முன்னிட்டு விடப்பட்டிருக்கும் விடுமுறையும் மக்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மறுபக்கம் மூணாறு சுற்றுலாத் தலம் உறைபனியால் புதிய தோற்றப்பொலிவுடன் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மூணாறு பகுதியே வெள்ளை வேளேர் என்று பனிப் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்க, இப்படியொரு சந்தர்ப்பத்தை நழுவவிடுவானேன் என பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் மூணாறுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

இதையும் படிக்க.. 900 கி.மீ. தொலைவில்.. இரட்டையர்களுக்கு ஒரே நேரத்தில் ஒன்று போல வந்த மரணம்

ஜனவரி மாதம் தொடங்கியது முதலே, மலைவாசஸ்தலமான மூணாறு பகுதியின் பல பகுதிகளில் தொடர்ந்து வெப்பநிலை குறைந்துகொண்டே வருகிறது. அங்கு கிட்டத்தட்ட மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் குளிர்நிலை பதிவாகியிருந்தது. இதனால், பல பகுதிகள் பனிப்போர்வை போர்த்தி உறைபனியாக மாறியது. சுற்றுலா பயணிகள் இதனை குதூகலத்துடன் அனுபவித்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த பல்வேறு மாநில மக்களும், விடுமுறையைக் கொண்டாட மூணாறுக்கு செல்லத் தொடங்கியிருக்கிறார்.

எங்குப் பார்த்தாலும் பச்சை பசேலென இருக்கும் மூணாறு பகுதி, மாலை முதல் அதிகாலை வரை வெள்ளை வேளேர் என பனிப்போர்வை போர்த்திக் கொண்டு காணப்படுவதைக் காணும் சுற்றுலா பயணிகள் தங்களது அனுபவத்தை செல்லிடப்பேசிகளில் புகைப்படங்களாகவும் விடியோக்களாகவும் பதிவு செய்து கொள்கிறார்கள். 

நீலகிரி உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களில் தொடர்ந்து உறைபனிக் காலம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில், மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் பூஜ்ஜியம் அளவுக்கு குளிர்நிலை குறையும் என்பதை உறுதி செய்ய இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூணாறு உள்ளிட்டப் பகுதிகளில் கண்காணிப்பு கருவிகள் அமைக்கப்படாததால், இங்கு வானிலை முன் கணிப்புகளை செய்ய முடியாதது மிகப்பெரிய பின்னடைவு என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் முன்பதிவு காரணமாக, தங்கும் விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டிசம்பர் - ஜனவரியில் மூணாறு பகுதியில் குளிர்நிலை நிலவுவது வழக்கம்தான் என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக ஓரிரு நாள்கள் பூஜ்ஜியம் வரை கூட குளிர்நிலை செல்வதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com