நாட்டின் 2வது ஆதியோகி சிலை: முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்!

பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபூரில் இந்தியாவின் இரண்டாவது ஆதியோகி திருவுருவத்தை திங்கள்கிழமை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.  
நாட்டின் 2வது ஆதியோகி சிலை: முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்!
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபூரில் இந்தியாவின் இரண்டாவது ஆதியோகி திருவுருவத்தை திங்கள்கிழமை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.  

கோவை ஈஷா யோகா மையத்தில், 2017 ஆம் ஆண்டு, 112 அடி உயர ஆதியோகி திருவுருவத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 

இந்த ஆதியோகி திருவுருவம், உலக அளவில் மிகப்பெரிய மார்பளவு சிலை என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றது.

இந்நிலையில், கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ளதை போன்ற, 112 அடி உயர ஆதியோகி திருவுருவம், கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபூரில் 112 அடி உயர ஆதியோகி திருவுருவம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு முன்னிலையில்  நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்று ஆதியோகி திருவுருவத்தை திறந்து வைத்தார். 

ஆதியோகிக்கு முன்பாக, யோகேஸ்வர லிங்கத்தை, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பிரதிஷ்டை செய்து வைத்தார். 

ஆதியோகி திருவுருவம் திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, ஆதியோகி, சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும் கண்ணை கவரும், 'ஆதியோகி திவ்ய தரிசனம்' நிகழ்ச்சியும் நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com