379 உணவு வகைகள்: புது மாப்பிள்ளைக்கு விருந்தளித்த மாமியார்!

புது மாப்பிளைக்கு 379 உணவு வகைகளை கொண்டு விருந்து வைத்த சம்பவம் அனைவரையும் ஈர்த்துள்ளது.
379 உணவு வகைகள்: புது மாப்பிள்ளைக்கு விருந்தளித்த மாமியார்!

புது மாப்பிளைக்கு 379 உணவு வகைகளை கொண்டு விருந்து வைத்த சம்பவம் அனைவரையும் ஈர்த்துள்ளது.

ஆந்திர மாநிலம் எலுரு நகரில் உள்ள ஒரு குடும்பம் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மருமகனுக்கு 379 உணவுகள் அடங்கிய விருந்து அளித்து அசத்தியுள்ளது. 

இந்த பிரமாண்ட விருந்தின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஒரு குடும்பம் தங்கள் மருமகனுக்கு வழங்கிய உணவு வகைகளின் எண்ணிக்கை இதுவே அதிகம்.

பிரிக்கப்படாத மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசாபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் கடந்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையின் போது வருங்கால மருமகனுக்கு 365 வகையான உணவு வகைகளை வழங்கியது நினைவிருக்கலாம். பண்டிகைகளின் போது மருமகனை உபசரிப்பது அல்லது மகிழ்விப்பது இந்திய குடும்பங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக கருதப்படுகிறது. 

சங்கராந்தி (பெத்த பண்டுகா) பண்டிகையின் போது மருமகனை உபசரிப்பது ஆந்திராவில் கடந்த சில ஆண்டுகளாக குடும்பங்களில் ஒரு அங்கமாகிவிட்டது, இருப்பினும் அவர்கள் பல ஆண்டுகளாக ஒரே பாரம்பரியத்தை அனைவரும் கடைப்பிடித்து வருகின்றனர்.

உணவுப் பொருட்களை தயாரிப்பதில் கோதாவரி மாவட்டம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளி நகரைச் சேர்ந்த புத்த முரளிதர், கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கொருபள்ளி குசுமாவை கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி மணந்தார்.

குசுமாவின் பெற்றோர் மருமகனுக்கு விருந்து வைக்க திட்டமிட்டு கடந்த ஒரு வாரமாக 379  வகையான உணவுப் பட்டியலை தயார் செய்தனர்.

"அவருக்கு அனைத்து வகையான உணவு வகைகளையும் வழங்க திட்டமிட்டோம். எனது பெற்றோர் கடந்த பத்து நாட்களுக்கு முன் உணவுப் பட்டியல் தயார் செய்தனர். உணவு வகைகளைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார்" என்று குசுமா தெரிவித்தார்.

"எல்லா பொருட்களையும் சுவைத்தேன். இது ஒரு வித்தியாசமான உணர்வு" என்று முரளிதர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com