கோப்புப் படம்
கோப்புப் படம்

இஸ்ரோவில் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் தற்கொலை!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஏவுதளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 
Published on

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்(இஸ்ரோ) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவ வீரர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் சத்தீஸ்கரை சேர்ந்த சிந்தாமணி என்பவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த விகாஸ் சிங் என்பவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து இரண்டு வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதால் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டு வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு உயர் அதிகாரிகளின் பணி அழுத்தம் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரனை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com